முன்னாள் முதல்வர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! நிமோனியா காய்ச்சலால் அவதி!

 

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி கடுமையான காய்ச்சல் காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திலும், கேரளாவிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (நிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவ பரிசோதனையில் திரு.உம்மன் சாண்டி நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில் உம்மன் சாண்டியின் மகன், தனது தந்தைக்கு லேசான நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், காய்ச்சல் அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன், தன்னை நேரில் அழைத்து தனது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  டாக்டர் மஞ்சு தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, உம்மன் சாண்டியின் உடல் நிலைக் குறித்து தொடர்ந்து கண்கானித்து வருகிறது. 

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2006 வரையிலும், மீண்டும் 2011ம் ஆண்டு முதல் 2016 வரையிலும் இரண்டு முறைகள் கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!