அதிர்ச்சி வீடியோ... உயிரிழந்த சிறுமியை வீதியில் தூக்கி வீசிய மருத்துவமனை.. கதறி துடிக்கும் பெற்றோர்!!
ஒரு புறம் வியக்கவைக்கும் தொழில்நுப்ட வளர்ச்சி , மறுபுறம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை , மனிதாபிமானமற்ற செயல் என தொடர்ந்து வருகிறது. மனித உயிருக்கு மதிப்பில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இறந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் பேரம், உயிரிழந்தவர்களின் உடலை காசின்றி தோளில் சுமந்து செல்வது, இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வது என நாளும் தொடர்கதையாகி வருவது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
உத்தர பிரதேச மாநிலம் கர்ஹால் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது அவருக்கு அங்கிருந்த மருத்துவர் சிறுமிக்கு ஊசி போட்டார். ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்து விட்டார். உயிர் மிக மோசமான நிலையை எட்டவே வேறு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் படி கூறியுள்ளனர் மருத்துவர்கள். உறவினர்கள், ‘எங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்’ என அழுதுகொண்டே கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அவர்களை வெளியேறச் சொல்லி வற்புறுத்தியது. இந்த நேரத்திற்குள் சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவில்லை. ஆம்புலன்ஸ் வரவழைக்கவில்லை. வெளியே இருந்த இருசக்கர வாகனத்தில் அமரவைத்து விட்டு சென்றுவிட்டனர். தாயும், தந்தையும் கதறி துடிக்கின்றனர். மருத்துவமனையில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கொடூர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...