அதிர்ச்சி வீடியோ... சாலையோரத்தில் அமர்ந்திருந்தவர்களை தாக்கிய குள்ளநரி!

 
 

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் ரெஹ்தி தாலுகாவில் சகோனியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குள்ளநரி ஒன்று திடீரென வந்தது.  மாலை 5 மணியளவில் குடியிருப்புவாசிகள் வசிக்கும் பகுதியில் 2 பேர் சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, குள்ளநரி ஒன்று அவர்களை நோக்கி ஓடி வந்தது.  அருகே வந்ததும் அவர்கள் 2 பேரும் உஷாராகி எழுந்து ஓட முயன்றனர்.  அவர்களில் ஒருவரை விடாமல் துரத்தி தாக்கியது. அவர் கற்களை எடுத்து வீசி அதனை விரட்டியடிக்க முயன்றுள்ளார்.

வனப்பகுதியால் கிராமம் சூழப்பட்டு உள்ளது. குள்ளநரி பதுங்கியிருந்து மீண்டும், எந்நேரமும் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது. இதனால், அந்த கிராமவாசிகள் அச்சத்தில் உள்ளனர். அவர்களில் பலர் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது, கைகளில் பாதுகாப்புக்காக தடிகளை கொண்டு செல்கின்றனர். மற்றொரு சம்பவத்தில், சல்கான்பூர் பகுதியில் குள்ளநரி ஒன்று நேற்று 5 பேரை தாக்கின. இதில், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்குதல் நடத்தியதில் மொத்தம் பெண், சிறுவர் சிறுமிகள் உள்பட 10 பேர் வரை உயிரிழந்தனர். 35 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீப நாட்களாக ஓநாய், குள்ளநரி போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்க தொடங்கியுள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை