undefined

கொடூரம்...  எக்ஸ்பிரஸ் ரயிலில்   பெண்களை தாக்கி வெளியே தள்ளிய நபர்!  

 
 

புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு வர்கலா ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் இரவு 8.30 மணியளவில் புறப்பட்ட ரயிலில் ஆலுவா பகுதியில் இரண்டு பெண்கள் பொது பெட்டியில் ஏறினர். கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்த அவர்கள் மீது, கதவு அருகே நின்றிருந்த சுரேஷ் குமார் என்ற நபர் திடீரென தாக்குதல் நடத்தினார்.

அவர் இருவரையும் அடித்து, காலால் உதைத்து, ஒருவரை ரயிலில் இருந்து தள்ளியதுடன், இன்னொருவர் கதவைப் பிடித்து தொங்கியபடி உயிர் தப்பினார். தண்டவாளத்தில் விழுந்த பெண் கடுமையாக காயமடைந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சுரேஷை பிடித்து கொச்சுவேலி நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சுரேஷ் திருவனந்தபுரம் நகரின் வெள்ளரதம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் குடிபோதையில் ரயிலில் ஏறியதாகவும், போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக போர்ட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!