undefined

அதிர்ச்சி வீடியோ... விபத்தில் பலியான மாணவியை கிண்டல் செய்த போலீஸ்!!

 

அமெரிக்காவில்  சியாட்டில் நகரில் போலீசாரின் ரோந்து வாகனம் மோதி  இந்திய வம்சாவளி மாணவி ஜானவி கந்துலா  உயிரிழந்தார்.இவருக்கு வயது 23. இவர்  சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக   சியாட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.  இது குறித்து நடத்தப்பட்ட  விசாரணையில்  பதிவு செய்யப்பட்ட வீடியோவை காவல்துறை தற்போது வெளியிட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான வீடியோ அது.  அதில், விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மேலதிகாரி, அந்த பெண் இறந்துவிட்டாள் எனக் கூறியபடி சிரிக்கும் சத்தம் கேட்கிறது.

விசாரணையை முடிக்கும் வரை கருத்து கூற முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான ஜானவி கந்துலா, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை