ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை... சவரன் ரூ.84,000யைக் கடந்து உச்சம்!
தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், புதிய உச்சமாக சவரன் விலை ரூ.84,000யைக் கடந்து விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு தொடக்கம் முதலே சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. செப்டம்பர் 16ம் தேதி சவரன் ரூ.82,000யைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
செப்டம்பர் 18ம் தேதி சவரனுக்கு ரூ.400ம், செப்டம்பர் 19ம் தேதி சவரனுக்கு ரூ80ம் குறைந்தன. சனிக்கிழமை சவரனுக்கு ரூ.90ம் நேற்று சவரனுக்கு ரூ.480ம் உயர்ந்து ரூ.82,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் 2வது முறையாக மாலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ10430க்கும் சவரனுக்கு ரூ560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ83440க்கும் உயர்ந்தது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 10,500-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 84,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.149க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1.49 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!