தொடரும் மழை... காய்கறிகள் விலை எகிறியது... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பரவலாக மழை பெய்ததில் வரத்துக் குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மொத்தச் சந்தையில் காய்கறி விலை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.20க்குச் சில்லறையில் விற்கப்பட்ட பீன்ஸ், இன்று ரூ.70 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.10லிருந்து நேரடியாக ரூ.50 ஆக உயர்ந்தது. ஊட்டி கேரட் ரூ.70க்கு, பீன்ஸ் ரூ.80க்கு, முள்ளங்கி ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் விலை ரூ.10 உயர்ந்து ரூ.30க்கு விற்பனையாகிறது.
மேலும் உஜாலா கத்திரிக்காய் ரூ.50க்கும், வரி கத்திரிக்காய் ரூ.40க்கும், சுரக்காய் ரூ.40க்கும் விலை உயர்ந்துள்ளன. சேனைக்கிழங்கு ரூ.50க்கு, முருங்கைக்காய் ரூ.60க்கு, காலிபிளவர் ரூ.50க்கு, வெள்ளரிக்காய் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அவரைக்காய் ரூ.80க்கு, மஞ்சள் பூசணி ரூ.30க்கு, வெள்ளை பூசணி ரூ.30க்கு, பீர்க்கங்காய் ரூ.50க்கு, கோவைக்காய் ரூ.40க்கு, கொத்தவரங்காய் ரூ.40க்கு, வாழைக்காய் ரூ.9க்கு விற்கப்படுகிறது.
காய்கறிகளுடன் மளிகைப் பொருட்களும் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.155 ஆகவும், துவரம்பருப்பு கிலோவுக்கு ரூ.125 ஆகவும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வால் நடுத்தர குடும்பங்கள் பெரும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றன. வியாபாரிகள், “மழை குறைவு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் நிலைமை சீராகும்” என தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!