undefined

தலைவா... காரை நிறுத்தி கைகொடுத்த சூப்பர் ஸ்டார்.. வைரல் வீடியோ!! 

 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் வெளியான இவரது ஜெயிலர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வாரிக்குவித்தது.தற்போது அடுத்த படமான தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கியுள்ளன. இந்த படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெற்று வருகிறது.


பணகுடியில் ஆர்எம்எஸ் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி நெல்லை வந்திருந்தார்.  நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி அந்த பகுதியில் அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் தொழிற்சாலையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக காரில் வந்த ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு செல்லும் காட்சியை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!