undefined

ஜவுளி சாம்ராஜ்யம்... போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார் காலமானார்... சொந்த ஊரில் இன்று இறுதிசடங்குகள்!

 

போத்தீஸ் ஜவுளி சாம்ராஜ்யத்தின் நிறுவனம் திரு.கே.வி.பி. சடையாண்டி மூப்பனார் நேற்று சென்னையில் காலமானார். அனைவராலும் அன்போடு கே.வி.பி. என்று அழைக்கப்பட்டவரின் இறுதி சடங்குகள் இன்று சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து ஜவுளித் தொழிலைத் தோளில் சுமந்தவர் போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி. இவர் திருநெல்வேலியில் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடையைத் தொடங்கி, 2000-களில் சென்னையில் கால் பதித்து, தமிழகத்தின் பல ஊர்களிலும், அண்டை மாநிலங்களிலும் ஜவுளி சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைக்க அடித்தளமிட்ட கே.வி.பி சடையாண்டி மூப்பனார் (84) நேற்று காலை சென்னையில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான விருந்துநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நடைபெறுகிறது. சடையாண்டி மூப்பனாரை இழந்து வாடும் மகன்கள், போத்தீஸ் நிறுவன உரிமையாளர்கள் எஸ்.ரமேஷ், எஸ்.போத்திராஜ், எஸ்.முருகேஷ், எஸ்.மகேஷ், எஸ்.கந்தசாமி, எஸ்.அசோக் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பணியாளர்கள் சோகத்தில் மூழ்கினர்.

நெசவு தொழில் செய்து வந்த சாலியர் இனத்தில் பிறந்த கே.வி. போதி மூப்பனார் 1946ம் ஆண்டு சைக்கிளில் தெருவில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் கலசலிங்க மூப்பனாரின் பேரனும் வைத்திலிங்க மூப்பனாரின் மகனும் ஆவார். போதி மூப்பனார் 1949ல் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே கடை வைத்து சன் அண்ட் கோ என்ற பெயரில் ஜவுளித் தொழிலைத் தொடங்கினார்.

இவரது ஒரே மகன் சடையாண்டி மூலம் 2ம் தலைமுறை, 6 பேரன்கள் மூலம் ரமேஷ், போத்திராஜ், முருகேஷ், கந்தசாமி, மகேஷ், அசோக், மூன்றாம் தலைமுறை மற்றும் இந்த 6 பேரன்களின் வாரிசுகள், நான்காம் தலைமுறை போத்திஸ் ஜவுளி நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது.

முதல் தலைமுறையில் 1949 வாக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் முதல் கடை, 1977ல் ஆண்டாள் கோயில் அருகே சடையண்டி மூப்பனார் மகன் இரண்டாவது கடை, ரமேஷ் மற்றும் சகோதரர்களால் 1986ல் திருநெல்வேலியில் 3வது கடை, படிப்படியாக சென்னை, மதுரை, கோவை, திருவனந்தபுரம் எனப் பரவியது.  பாண்டிச்சேரி, நாகர்கோவில், திருச்சி, பெங்களூர், சேலம். என 16 நகரங்களில் கடைகளாக விரிவுபடுத்தப்பட்டது.

அடுத்த 17வது கடை கொச்சியில் (எர்ணாகுளம்) உள்ளது. இந்த வளர்ச்சி என்பது உறுதியான உழைப்பின் வெற்றி, உறவுகளின் விசுவாசமான உழைப்பு, தொழிலாளர்களின் உழைப்பு, இந்த இமாலய வெற்றியில் பங்கு உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டித்தெரு போத்திஸ் பேரரசின் முதல் அரசரான போதி மூப்பனாரின் வீட்டுத் தெரு. அந்தத் தெருவில் தான் அவருடைய பூர்வீக வீடு உள்ளது.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஒரு ஊழியரும் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பு விடுத்தால், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்வது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் என்றால் சடையண்டி , வேலம்மாள் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வார்கள். இவ்வாறு தொழிலாளி குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து, எண்ணற்ற குடும்பங்களுக்கு வாழ்வளித்து, சடையாண்டி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!