இன்று காலை திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் துவங்குகிறது... மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது!
இன்று சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. வால்டாக்ஸ் சாலை வழியாக புறப்படும் ஊர்வலம் மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, வருடந்தோறும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 21வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற உள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கும் திருக்குடைகள் ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. சென்னையில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலம், தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று வரும் செப்டம்பர் 26ம் தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதன் பின்னர் மற்ற திருக்குடைகள், வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் அடுத்த நாளான செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை மாலை திருமலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!