undefined

பகீர் வீடியோ... கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு... 4 பேர் பலியான சோகம்!

 

இன்றைய தினம் இத்தனை மோசமாக விடிந்திருக்க தேவையில்லை. நேற்றிரவு பெரும் நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கியெடுத்த நிலையில், இன்று காலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பலரும் வழிப்பாட்டிற்காக தேவாலயத்தில் குவிந்திருந்தனர். இந்நிலையில், கிறிஸ்துவ வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்ததோடு ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மராவி நகரத்தில் மின்டோனா மாநில பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் கத்தோலிக்க கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைப்பெறும். தேவாலயங்கள் அதிகமாக இல்லாத நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் கத்தோலிக்க வழிப்பாட்டு கூட்டங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்துவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மிண்டோனா மாநில பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டு கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ், இது வெளிநாட்டு தீவிரவாதிகளின் சதி என குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு மராவி நகரத்தில் ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 1100 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அடிக்கடி இஸ்லாமிய பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவத்திற்கும் அவர்கள் காரணமாக இருக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.

கிறுஸ்துமஸ் காலம் நெருங்கி வருவதால், இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிலிப்பைன்ஸின் அண்டை நாடுகளில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்