பகீர் வீடியோ... டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு... நிவாரணத்தொகை அறிவித்த உ.பி. முதல்வர்!
பெரும் சோகமாய், கங்கையில் நீராட குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் கவிழ்ந்து குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் பாட்டியாலி தரியவ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் குடும்பத்துடன் கங்கை ஆற்றில் குளிப்பதற்காக டிராக்டர் ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சென்ற போது, திடீரென டிராக்டர் கவிந்து வழியில் இருந்த குளத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் குளத்தில் மூழ்கி 15 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து தம்முடைய எக்ஸ் பக்கத்தில் "காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். படுகாயம் அடைந்த அனைவருக்கும் முறையான இலவச சிகிச்சை அளிக்கப்படும். இவர்களின் ஆன்மா சாந்தியடையவும், படுகாயம் அடைந்தவர்கள் குணமடையவும் ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்கிறேன். ” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!