undefined

வைரலாகும் வீடியோ... சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

 

நம்ம சென்னை என்று கெத்து காட்டுபவர்கள், பேரிடர் காலங்களில் தங்கள் புறாக்கூண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி போய் விடுகிறார்கள். பெரும்பாலானவர்கள், தங்கள் குடியிருப்பு பகுதியில் இருப்பவர்களுக்கும் சேர்த்தே பொருட்களை வாங்குவோம் என்றோ அல்லது தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் என்றோ யோசிப்பதில்லை. 

பக்கத்து வீட்டில் இருப்பவனின் நலனைப் பற்றியோ, அவனுடைய தேவை குறித்தோ கவலைப்படாத நாம் தான், ட்விட்டரிலும், முகநூலிலும், வாட்ஸ்-அப் குழுக்களிலும் யாருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு மெனக்கெட்டு செய்திகளை அனுப்பி கொண்டிருக்கிறோம். 

இதெல்லாம் தவறு என்று மீண்டும் ஒரு முறை முகத்திலறைந்து சொல்லிச் சென்றிருக்கிறது இயற்கை. ஆம்.. ‘மிக்ஜாம்’ புயல் இன்று தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.

தொடர் மழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்நிலையில், இடைவிடாது பெய்யும் கனமழையால் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு குவியலாக ஒரு இடத்தில் தங்கி நின்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!