பகீர் வீடியோ... பள்ளி மாணவர்களை கால்களை முத்தமிட்டு, நக்க செய்த கொடூரம்!

 

இன்னும் அமெரிக்காவில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து எதிர்ப்பை பலரும் பதிவு செய்து வருகின்றனர். தங்களது கால் பெரு விரல்களில் வேர்க்கடலை வெண்ணெய் தடவி,  சக மாணவர்கள் நக்கி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் கண்டனங்களுடன் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் டீர் கிரீக் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி, நிதி திரட்டும் பொருட்டு சமூக சேவைக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிதிதிரட்டலில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

போட்டி என்ற பெயரில், சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  அதில், மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மற்ற மாணவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். பலர் கண்டனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.  

இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி வழியே, ரூ.1 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம் அளவுக்கு பணம் திரண்டுள்ளது.  இதற்காக மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர். எனினும் நிறைய பணம் சேர்ந்ததற்காக, ஒரு சில பெற்றோர் இதற்கு வரவேற்பும் தெரிவித்து உள்ளனர்.  

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளியில் ஒரு வார காலத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அருகேயுள்ள காபி கடை ஒன்றில் வேலைக்கு மாற்று திறனாளிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிதி சேகரிக்கும் பணி நடந்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!