செளதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான கால்பந்துத் திடல்!
செளதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் கட்டும் திட்டம் உருவாகி உள்ளது. “நியோம் ஸ்டேடியம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரமாண்ட அரங்கம், 46,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளது. மேலும், இது முழுமையாக சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியால் இயங்கும் பசுமை முறைத் திடலாக அமைவுள்ளது.
எண்ணெய் வளங்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா மற்றும் விளையாட்டு துறைகளிலும் முன்னேற்றம் காண செளதி அரேபியா பல புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் ஒரு முக்கிய முயற்சியாக, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களைக் கவரும் வகையில் நியோம் பகுதியில் இந்த உயரமான திடல் கட்டப்படவுள்ளது.
2027ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன. 2032ஆம் ஆண்டிற்குள் இது முழுமையாக முடிக்கப்படும் என்றும், 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை போட்டிகளை இத்திடலில் நடத்தும் நோக்கம் செளதி அரசுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ‘விஷன் 2030’ திட்டத்தின் ஒரு முக்கிய அடையாளமாக நியோம் ஸ்டேடியம் அமையவுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!