undefined

நகராட்சி துறையில் நியமன முறைகேடு இல்லை... அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

 

நகராட்சி நிர்வாகத்துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை என தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.ந.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

நகராட்சி துறையில் 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணியில் பெரும் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை சமீபத்தில் தெரிவித்தது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும், இதில் அமைச்சர் கே.ந.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் பெயர்கள் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் கே.ந.நேரு, “நகராட்சி நிர்வாகத்துறை ஆட்சேர்ப்பில் எந்த முறைகேடும் இல்லை. அனைத்து பணியிடங்களும் வெளிப்படையான மற்றும் ஒழுங்குமுறைப்படி நிரப்பப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த நியமன விவகாரத்தை இப்போது தூசி தட்டி எடுத்து அரசாங்கத்தையும் என்னையும் களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறது அமலாக்கத்துறை,” எனத் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?