undefined

அக்.3 வெள்ளிக்கிழமை லீவு கிடையாது...தமிழ்நாடு அரசு தகவல்... பொதுமக்கள் அதிர்ச்சி!

 

அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஆயுத பூஜை, நாளை விஜய தசமி, காந்தி ஜெயந்தி அதன் பின்னர் சனி, ஞாயிறு என்று விடுமுறை தினங்களாக உள்ள நிலையில், இடையே வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அமையும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அரசு பொதுவிடுமுறை என்று தகவல் நேற்று மாலை பரவியது. ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், பலரும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்கிற  மகிழ்ச்சியில் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு வருகிற வெள்ளிக்கிழமை (3.10.25) விடுமுறை வழங்கியதாக நேற்று வெளியான தகவல் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) தங்களின் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “"வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான செய்தியை பகிர்ந்து, அக்டோபர் 3 ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை அல்ல. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது" என்று கூறியுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?