undefined

தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி!!

 

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இவர் கடந்த 2 நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது  காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு காய்ச்சல் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

செப்டம்பர் 30ம் தேதி வரை அவரை  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என கட்சியின் சார்பில்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இத்தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!