ஜேசன் சஞ்சய் படத்தில் துல்கர் சல்மான்... எகிறும் எதிர்பார்ப்பு!
தமிழ் திரையுலகில் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் லைகா தயாரிப்பில் உருவாக இருப்பதாகவும் அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த படத்தின் பெயர், ஹீரோ , நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ளார். இந்நிலையில் அவரது மகன் சஞ்சய் திரையுலகில் அறிமுகவாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவாக பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மலையாளம், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா மொழிகளில் முண்ணனி ஹீரோவாக நடித்து வருகிறார் . கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப், சூர்யாவின் 43வது படம் என தமிழில் ஏற்கனவே இரண்டு பெரிய ப்ராஜெக்ட்களில் கமிட்டாகி இருக்கும் துல்கர் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!