ஒரே நாளில் 2 வது முறையாக உயர்ந்த தங்கம்... சவரன் ரூ85000ஐ கடந்தது! 

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.  கடந்த 9 மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.21000 அதிகரித்துள்ளது.  விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என வியாபாரிகள் கருதியுள்ளனர்.  

அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்தது.  இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10500ம், ஒரு சவரன் ரூ.84000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ149க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ149000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. 

அதன்படி, கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்திருப்பதால்  மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.150க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.150000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?