சற்றே குறைந்த தங்கம்... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 18 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.775-ம், சவரனுக்கு ரூ6200ம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10600-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை தங்கத்தைவிட வெள்ளி விலையின் வேகமும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. தங்கத்தை போலவே நேற்று வெள்ளி விலையும் 2 முறை உயர்ந்து காணப்பட்டது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1,50,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளியில் விலையில் மாற்றமில்லை. அமெரிக்காவின் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்திருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும் முதலீட்டாளர்களின் கவனம் பெருமளவில் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!