undefined

எகிறிய  தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!  

 
 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.  வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.  புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கு விற்பனையானது. இந்நிலையில், வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10,640-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்த வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 159 ரூபாய்க்கும் கிலோவுக்கு 6000 உயர்ந்து பார் வெள்ளி ரூ1,06,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?