undefined

 மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.... நகை வியாபாரிகள் உற்சாகம்! 

 

 தங்கம் விலை தினம் தினம் புதுப்புது உச்சம் தொட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அக்டோபர் 17ம் தேதி வரலாறு காணாத உச்சம் தொட்டது. இதன் பிறகு  குறையத்  தொடங்கிய தங்கம் அக்டோபர் 28ம் தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.  அதிலும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடித்து வருகிறது.அந்த வகையில்  நேற்று முன்தினம்  ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.  இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி  கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.165000க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!