undefined

இந்தப் பக்கம் போகாதீங்க... முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை முதல்  கோவை-பொள்ளாச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் வரை பொள்ளாச்சியில் சாலைகளில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து போக்குவரத்து போலீசார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்  “ முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பை நல்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.


அதன்படி 
பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்தி சிலையிலிருந்து பாலக்காடு ரோட்டில் முத்தூரில் வலதுபுறம் திரும்பி டி. நல்லிகவுன்டன்பாளையம் வழியாக சி.கோபாலபுரம் சென்று வடக்கிபாளையம் சாலையை அடைந்து வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை செல்ல வேண்டும்.
 பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் கோவில்பாளையத்தில் இடதுபுறம் திரும்பி நெகமம் ரோட்டில் கக்கடவு வழியாக நெகமம் நால் ரோடு வந்து பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் கரப்பாடி பிரிவு வழியாக அனுப்பர்பாளையம் திப்பம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.


ஆனைமலை பாலக்காடு திருச்சூர் செல்லும் வாகனங்கள் நெகமம் ரோட்டில் நேராக புளியம்பட்டி தேர்நிலை வந்து பாலக்காடு சாலையில் செல்ல வேண்டும். கேரளாவிலிருந்து வாளையார் வழியாக கோவை வரும் கனரக வாகனங்கள் பாலத்துறை சந்திப்பு வழியாக அனுப்பப்படும். அவிநாசியிலிருந்து கோவை வரும் கனரக வாகனங்கள் கருமத்தம்பட்டி சந்திப்பு வழியே அனுப்பப்படும். 

திருச்சி சாலை வழியே கோவை வரும் வாகனங்கள் காரணம்பேட்டை சந்திப்பு வழியே அனுப்பப்படும்.
கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் குள்ளக்காபாளையம் பிவிஎன் பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தொப்பம்பட்டி வந்து நெகமம் ரோட்டில் பொள்ளாச்சி அடைய வேண்டும். 


பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் வடக்கிபாளையம் பிரிவில் இடதுபுறம் திரும்பி வடக்கிபாளையம் ரோட்டில் வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை ரோட்டை அடைந்து கோவை செல்ல வேண்டும்
 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்பகலுக்கு பிறகு இவை அனைத்தும் பழைய முறைப்படி வழக்கமான பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!