undefined

வாகன ஓட்டிகளே இந்தப் பக்கம் போகாதீங்க...  சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 

 தமிழகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறில் இன்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சென்னை போக்குவரத்து போலீசார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ” சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அடையாறு டெலிபோன் எக்சேஞ்ச் அருகே மெட்ரோ ரயில் பணியினை மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும்  போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.  

அதன்படி டாக்டர் முத்துலட்சுமி சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு தொலைபேசி நிலையத்தில் தடைசெய்யப்படும். இந்த வாகனங்கள்  காமராஜ் அவென்யூ 2-வது குறுக்குத் தெரு (இடதுதிருப்பம்) - சாஸ்திரிநகர் 1-வது பிரதானசாலை (திருப்பத்தில்) - மகாத்மாகாந்தி சாலை (வலதுதிருப்பம்) - லட்டிஸ் பாலம் சாலை (இடதுதிருப்பம்) வழியாக செல்லலாம்.

இந்த பாதை ஒரு வழி போக்குவரத்தாக செயல்படும்.   அதே போல் திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து அடையாறு மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை எதுவும் கிடையாது. இந்த வாகனங்கள் வழக்கமான வழிகளில் செல்லலாம். இந்த ஏற்பாடுகளுக்கு  வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை