undefined

வாகன ஓட்டிகளே  குறிச்சிக்கோங்க ...  சென்னையின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 
 

தமிழகத்தில் சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பணிகளுக்கு ஏற்றவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டை - மேடவாக்கம் கூட்ரோடு  இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரயில் நிலையங்கள்  அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்:18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது. 


தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு. வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடதிலேயே 25 சாதாரண கட்டண  சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.


தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண  சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு. ஈச்சங்காடு. காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை. நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18C, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!