இந்தப் பக்கம் போகாதீங்க... இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்!
மதுரை மாநகரில் வருகிற புதன், வியாழக்கிழமைகளில் (அக். 29, 30) தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியே செல்லும் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேவா் ஜெயந்தி விழாவுக்காக வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்களுக்கு எம்.எம். விடுதி சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி கல்லூரி தரைப்பாலம் சந்திப்பு வழியாக கோரிப்பாளையம் நோக்கி செல்ல அனுமதி இல்லை. கனரக சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை மதுரை நகரை விட்டு வெளியே உள்ள சுற்றுச் சாலைகளை பயன்படுத்தி செல்ல வேண்டும். அவசர ஊர்திகள் மட்டும் வழக்கமான சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு பல்வேறு மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வழிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்களில் காவல்துறையால் அனுமதிக்கப்பட்டவை மட்டுமே நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படும். பொதுமக்கள் குழப்பம் இல்லாமல் பயணிக்கவும், காவல்துறை வழங்கிய வழித்தட மாற்றங்களை பின்பற்றவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!