இன்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி!

 

 


இன்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வழக்கமாக மின்சார ரயில்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியிடங்களுக்கும் செல்லும் மக்கள் அவதியுற்று வருகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புபவர்கள் திடீரென மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதியுற்றனர்.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கல்பட்டு பணிமனையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.31, 9.51, 10.56, 11.40, மதியம் 12.25 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 7.27 மணிக்கு திருமால்பூருக்கும் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 11.30, மதியம் 12, 1.10, 1.45, 2.20 மணிக்கும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கும் கடற்கரை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 9.31, 10.56, மதியம் 12.25 சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், காலை 9.51, காலை 11.40 மணிக்கு காட்டாங்கொளத்தூருக்கும் சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும்.

அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கப்பெருமாள் கோவில் இருந்து காலை 11.43, மதியம் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்கொளத்தூரில் இருந்து மதியம் 12.20, 2.05 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?