டிக்கெட் கவுண்டரில்   புரோக்கர் அட்டூழியம்...  ரயில்வே  பெண் ஊழியரை 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிய பயணி... வைரல் வீடியோ!

 

போபால் ரயில் நிலையத்தில், வரிசையை மதிக்காமல் ஒருவருக்கு டிக்கெட் வழங்கிய ரயில்வே பெண் ஊழியரை, பயணி ஒருவர் சரமாரியாகக் கேள்வி கேட்கும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. நீண்ட நேரமாக வரிசையில் நின்றிருந்த பயணிகளைப் புறக்கணித்துவிட்டு, திடீரென வந்த ஒருவருக்கு அந்த ஊழியர் முன்னுரிமை அளித்ததே இந்தப் போர்க்களத்திற்கு வித்திட்டது.

ஆத்திரமடைந்த அந்தப் பயணி, "நாங்கள் எல்லாம் இங்கே வெட்டியாகவா நின்று கொண்டிருக்கிறோம்? வரிசையில் வராத இவர்களுக்கு மட்டும் எப்படி முதலில் டிக்கெட் தருகிறீர்கள்? இது உங்கள் உடந்தையுடன் நடக்கும் தரகு வேலையா? ஏசி கவுண்டர் முதல் ஸ்லீப்பர் கவுண்டர் வரை இவர்களுக்கே முன்னுரிமை தர நீங்கள் என்ன பயணிகளை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டீர்களா?" என ஆவேசமாக எகிறினார். மேலும், "இந்த வீடியோவை ரயில்வே அமைச்சருக்கும், டி.ஆர்.எம்-க்கும் (DRM) அனுப்பி உங்கள் வேலையையே காலி செய்வேன்" என அவர் எச்சரித்தபோது, அங்கிருந்த மற்ற பயணிகளும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மற்றும் அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. "முறைகேடு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே ஊழியரின் இந்தச் செயல்பாடு குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை