undefined

லிவ்-இன்- உறவில் சிக்கல்... அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டியதால் ஒயின், நெய் அபிஷேகம்... தீ வைத்த இளம்பெண்!

 

 

டெல்லியில், லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்த இளம்பெண்ணை, திடீரென அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் காட்டி, அவற்றை தர மறுத்து வந்த ஆண் நண்பரை, ஒயின், நெய், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலைச் செய்து, இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் கேஷ் மீனா (32) அரசு வேலைக்கான தேர்வுக்கு தயாராகி வந்தவர். அவருடன் பழக்கம் ஏற்பட்ட அம்ரிதா சௌஹான் (21) என்ற இளம் பெண், அவருடன் லிவ்-இன் உறவில் தங்கி வந்தார்.

கடந்த அக்டோபர் 6 அன்று, ராம் கேஷ் வசித்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்த போதும், ராம் கேஷ் உடல் கருகி உயிரிழந்திருந்தார். இது முதலில் விபத்தாகக் கருதப்பட்டது.

ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தீ ஏற்படுவதற்கு முன் மூன்று பேர் வீட்டிற்குள் சென்றதை கண்டறிந்தனர். அதில் ஒருவராக அம்ரிதா அடையாளம் காணப்பட்டார்.

அவரை கைது செய்து விசாரித்த போது, ராம் கேஷ் தனது தனிப்பட்ட வீடியோக்களை நீக்க மறுத்ததால் கோபமடைந்த அம்ரிதா, தனது நண்பர்கள் சுமித் மற்றும் சந்தீப் ஆகியோருடன் சேர்ந்து அவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

தடயவியல் அறிவியல் மாணவியான அம்ரிதா மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பணியாற்றும் சுமித் ஆகியோர், கொலையை தீ விபத்தாக காட்டும் வகையில் திட்டமிட்டிருந்தனர். ராம் கேஷை அடித்துக் கொன்று, அவரது உடலில், மண்ணெண்ணெய், நெய், ஒயின் ஆகியவற்றை ஊற்றி தீ வைத்தனர். பின்னர், சிலிண்டரை வெடிக்கும் வகையில் அமைத்து அங்கிருந்து தப்பினர்.

பின்னர் நடந்த விசாரணையில், மூவரும் ராம் கேஷின் மடிக்கணினி, ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. தற்போது அம்ரிதா, சுமித், சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!