தூத்துக்குடியில் 22 விநாயகர் சிலைகள் கடற்கரையில் விசர்ஜனம் கரைப்பு!
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 22 சிலைகள் திரேஸ்புரம் கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட சிலைகள் சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. குறிப்பாக, மாநகர இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி தவசு மண்டபத்தில் 9 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலையும், பல்வேறு உயரங்களில் 85 சிலைகளும் அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 22 சிலைகள் நேற்று மாலையில் தூத்துக்குடி தேரடி பகுதியில் ஒன்றாக அணிவகுத்தன. தொடர்ந்து தேரடி பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் செல்வசுந்தர்ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் இந்த சிலைகள் அனைத்தும் 1ம் ரயில்வே கேட் வழியாக கொண்டு செல்லப்பட்டு, திரேஸ்புரம் சங்குமுக கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!