இன்று மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்! 

 

இன்று அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு  மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை செல்பவா்களுக்காக நேற்று இரவு முன்பதிவில்லாத 2 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆயுத பூஜை முடிந்து சென்னைக்கு திரும்புபவா்களுக்காக மதுரையிலிருந்து முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (எண்: 06162) புதன்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு சென்னை தாம்பரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மெமு ரயிலில் 12 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூா், பாடலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?