காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த சன்னி லியோன்.. ஷாக் ஆன அதிகாரிகள்!
உத்தரபிரதேச மாநில காவல்துறைக்கான காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது.இதில் கன்னோஜின் திருவாவில் உள்ள ஸ்ரீமதி சோனஸ்ரீ மெமோரியல் பெண்கள் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். தேர்வுக்கு வராதவர்கள் பட்டியலில் சன்னிலியோனின் பெயரும் இருந்தது.
விண்ணப்பதாரர்கள் யாரேனும் தவறுதலாக இதைச் செய்தார்களா அல்லது விஷமிகளின் செயலா என்பது குறித்து உ.பி போலீஸார் விசாரணை நடத்தினர். சன்னிலியோன் பெயரிலான விண்ணப்ப நகலில், மும்பை முகவரியும், அலைபேசி உபி பின்னணியிலும் இடம்பெற்றிருந்தது.
உத்தரப் பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் பின்னணி குறித்து உ.பி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உ.பி., கான்ஸ்டபிள் தேர்வுக்கு சன்னி லியோன் விண்ணப்பித்துள்ளதாக இணையத்தில் வைரல் பதிவுகள் பரவி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!