இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது !
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்ததாவது: “பிரதமர் நரேந்திர மோடி மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்கள் அடிக்கடி தொடர்பில் இருந்து பேசுகின்றனர்.
அதிபரும் அவரது வர்த்தகக் குழுவும் இந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் தீவிரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் காண்கின்றன,” என அவர் கூறினார்.
“சமீபத்திய தீபாவளி கொண்டாட்டத்தின் போதும், ஓவல் அலுவலகத்திலிருந்து பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, மூத்த இந்திய-அமெரிக்க அதிகாரிகளும் அவருடன் இருந்தனர். அதிபர் டிரம்ப், இந்தியா–அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த உறுதியாக உள்ளார்,” என்றும் கரோலின் லீவிட் குறிப்பிட்டார்.
ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்திருந்தார். இருப்பினும், தற்போது இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விரும்புவதாக அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!