15 வயது மகளின் தந்தைக்கு  2ம் தாரமான நடிகை வரலட்சுமி... ரசிகர்கள் அதிர்ச்சி!

 

 
 நடிகை வரலட்சுமி சரத்குமார்    2012ல்  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  'போடா போடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பும், நடனமும்  ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. இருந்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இதனையடுத்து தெலுங்கு, கன்னடம் மொழிகளுக்கு தாவினர்.  வரலட்சுமிக்கு மீண்டும் 'தாரைதப்பட்டை' படத்தின் மூலம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, எச்சரிக்கை, சண்டைக்கோழி 2 என அடுத்தடுத்து வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.  கதாநாயகியாக மட்டுமின்றி  வில்லியாகவும், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் இறங்கி நடித்து வருகிறார்.   இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்  தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்த  புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 
இவருடைய திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில்... மிகவும் எளிமையாக நடந்து முடிந்ததாகவும், இரு வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.    விஷாலை காதலித்து, அந்த காதலில் தோல்வியை சந்தித்த வரு... இந்த முறை ஏற்கனவே திருமணம் ஆகி, 15 வயது பெண் குழந்தையின் தந்தையான நிக்கேலாய் சச்தேவ்வை கரம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 43.  இவர் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 2வது மனைவியாக வரலட்சுமி வாக்கப்படுவது குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் இதுகுறித்து தற்போது அதிரடி விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.


 அந்த பதிவில்   "மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதுமே... கவலைப்படமாட்டேன் .நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் வரப்போவது இல்லை நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்பீர்கள் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!