க்யூட் வீடியோ... வாத்துகளுக்காக வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள குவிநானா சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தபோது, வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் சாலையை கடக்கத் தொடங்கியது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களை நிறுத்தி, வாத்துகளுக்கு வழி விட்டனர். அவை மெதுவாக சாலையை கடந்து சென்றவுடன் வாகனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலிய வாகன போக்குவரத்து கழகம் இதுகுறித்து எச்சரிக்கை வெளியிட்டு, “வனவிலங்குகள் சாலையை கடக்க முயன்றால் வாகன ஓட்டிகள் காரிலேயே இருங்கள்; உதவி தேவையெனில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும்” என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!