அக்டோபர் 28ம் தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை!
இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். அவரின் தேர்வு பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். வரும் 28 ஆம் தேதி கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 29 ஆம் தேதி, அவர் தனது சொந்த ஊரான திருப்பூரில் தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!