மீரா தங்கம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டா... விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்...!!
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவரது மகள் மீரா செப்டம்பரில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 16 வயதான பள்ளி மாணவியான மீராவின் இந்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையுமே கலங்கடித்துவிட்டது. பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்த மீரா கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
நீ எங்களை விட்டு சீக்கிரமாய் போய்விட்டாய். இந்த உலகம் உனக்கானதாக இல்லை போல! ஆனால், அம்மா இன்னும் இங்கேயே தான் இருக்கிறேன். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையேயான கான்செப்ட்டை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நான் உன்னிடம் வரும் வரை நன்றாக சாப்பிடு, தூங்கு. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டா. ரொம்ப வலிக்குது. கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு படிப்பவர் மனதை கரைய வைக்கிறது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!