விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற மர்ம கார் - போலீசார் விசாரணை

 

நேற்றைய நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரத்த்தை முடித்துக் கொண்டு விமான நிலையம் புறப்பட்ட நிலையில், உ.பி. பதிவு எண் கொண்ட மர்ம கார் ஒன்று நடிகர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் உயர்அதிகாரிகள் அந்த காரை மடக்கி பிடித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

கரூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நடிகர் விஜய் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார். திருச்சி நெ.1 டோல்கேட் அருகே நடிகர் விஜய்யின் காரை பின்தொடர்ந்த உ.பி. பதிவு எண் கொண்ட கருப்பு நிற கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

விமானநிலையம் அருகே வந்ததும், ஆங்காங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பின்னால் வந்த மர்ம காரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவுவாயில் அருகே இருந்த தடுப்புகளை இடித்துக் கொண்டு சென்றது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உயர்அதிகாரிகள் அந்த காரை மடக்கி பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த காரில் இருந்த நபர் தனது குடும்பத்தினர் நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அதனால் அவரை பின்தொடர்ந்து வேகமாக வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த கார் உத்தர பிரதேச மாநில பதிவு எண்ணை கொண்டு இருந்தது. இது குறித்து விமானநிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?