undefined

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை..  பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு!

 

வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். வங்கதேசத்தில் அரசுப் பதவிகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர் அமைப்புகள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து அந்நாட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல இடங்களில் கலவரமாக மாறி நேற்று மட்டும் 52 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.கலவரம் மேலும் தீவிரமாகமல் தடுக்க வங்கதேச அரசு செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.இந்நிலையில், இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அசாம் மற்றும் மேகாலயா மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்திலிருந்து பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் இதுவரை 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டாக்கா மற்றும் சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அங்குள்ள 15,000 இந்தியர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!