உஷார்... அட்ரஸ் போர்டுகளில் நோட்டீஸ் ஒட்டியவர்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் !!

 

உஷார்.. மக்களே.. தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்ட துவங்கிடுச்சு. இந்த திருவிழா ஈரோடு கிழக்கு தொகுதியோட முடிய போறதில்லை. அடுத்து பாராளுமன்றம்.. அதற்கடுத்து சட்டசபைத் தேர்தல் என இனி திருவிழா தான். உங்களுக்குப் பிரியமான நடிக, நடிகைகளின் படங்களையோ, அரசியல் தலைவர்களின் படங்களையோ போஸ்டராக டிசைன் செய்து உங்கள் வீட்டு சுவர் முழுக்க ஒட்டிக் கொள்ளுங்க.

வழி தெரியாதவர்கள் தெரு பெயர் பார்க்க வசதிக்காக தான் பெயர் பலகை வைக்கபட்டிருக்கு. அப்படி அந்த பலகைகளின் மேல் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. இனி உஷாரா இருங்க. எங்கே இடம் கிடைச்சாலும் ஒட்டித் தொலைக்காதீங்க. அதனால கஷ்டப்படுறது உங்க தலைவர்கள் கிடையாது... அப்பாவி பொதுஜனங்கள் தான். சென்னையில் மாநகராட்சியின் சாலை மற்றும் தெரு பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டிச்செல்கின்றனர். இதனால் முகவரி தேடி அலைபவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். சாலையின் பெயர், தெருவின் பெயரே சென்னையில் முகவரியை கண்டுபிடிக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் அதன்மேல் கண்ணாபின்னானு சுவரொட்டிகளை ஒட்டிச்செல்கின்றனர். 

இந்த நிலையில் இது தொடர்பாக புகார் குவிந்த நிலையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சிக் கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, மாநகரின் அழகு சீர்குலைக்கப்படுகிறது.

தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டப்படி, நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதன் அடிப்படையில், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஜன. 11-ம் தேதி முதல் பிப்.1-ம் தேதி வரை, மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய 340 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சென்னை மாநகரில் பொது இடங்கள் மற்றும் தெரு, சாலை பெயர்ப் பலகைகள், இதர அறிவிப்புப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்