undefined

ரூ.1.9 கோடி வீணானதா?! டெல்லியின் செயற்கை மழை முயற்சி தோல்வி குறித்து கான்பூர் ஐஐடி விளக்கம்!

 

வடஇந்தியாவின் குளிர்காலம் தொடங்கும் போதெல்லாம் டெல்லி நகரம் கடுமையான காற்று மாசால் மூடப்படுகிறது. இந்த முறை அந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு இணைந்து தொழில்நுட்பத்தின் உதவியால் செயற்கை மழை பெய்யும் திட்டத்தை முன்னெடுத்தது.

இந்த திட்டத்தின் பொறுப்பு ஐஐடி கான்பூருக்கு ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் ரூ.1.9 கோடி செலவில், டெல்லி வானில் மூன்று முறை சிறப்பு விமானம் மூலம் சில்வர் அயோடைடு உள்ளிட்ட ரசாயனங்களை மேகங்களில் தெளித்து மழை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஒரு சொட்டு மழை கூடப் பெய்யாததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

செயற்கை மழையின் அறிவியல் முறைப்படி, மேகங்களில் குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீத ஈரப்பதம் இருந்தால் மட்டுமே ரசாயனத் தெளிப்பு மழை பெய்ய வழிவகுக்கும். ஆனால் டெல்லியில் சோதனை செய்யும் போது மேகங்களில் வெறும் 30 முதல் 40 சதவீத ஈரப்பதம் மட்டுமே இருந்ததாக ஐஐடி கான்பூர் விளக்கியுள்ளது. இதனால் ரசாயனங்கள் செயல்படாமல் மழை ஏற்படவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், திட்டம் தாமதமாக தொடங்கியதுதான் முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறினர். ஆரம்பத்தில் மழைக்காலம் முடிவதற்கு முன்பே சோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாகச் சிக்கல்களால் தாமதமானதால், மேகங்கள் வறண்டு ஈரப்பதம் குறைந்துவிட்டன. இதனால் திட்டம் தோல்வியடைந்தது என விளக்கம் அளிக்கப்பட்டது.

டெல்லி, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காற்று மாசு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. வல்லுநர்கள் கருத்துப்படி, இயற்கைச் சூழல் சரியாக அமையாதபோது தொழில்நுட்பத் திட்டங்கள் தோல்வியடைவது தவிர்க்க முடியாதது. இனி இத்தகைய முயற்சிகளை சரியான காலத்திலும், அறிவியல் அடிப்படையிலும் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?