ரூ1000 வராததற்கு  என்ன காரணம்?! உங்க போன்லேயே பாக்கலாம்!!

 

தமிழகம் முழுவதும் 1கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15 அன்று   மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை  ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ1,000  வரவு வைக்கப்பட்டு உள்ளது. சில குடும்பத் தலைவிகளுக்கு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலவில்லை. அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.


 
வரவு வைக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகள் எடுக்கும் வரை அவர்களின் வங்கி கணக்கிலேயே தொடர்ந்து இருக்கும். பயனாளிகள் தங்களின் தேவை அல்லது விரும்பும் வரை தொகையினை வங்கி கணக்கில் வைத்திருக்கலாம்.மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகிய காரணங்களுக்காக திட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக சில வங்கிகளால் பிடித்தம் செய்யப்படக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  முதல்வரின் முகவரி உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1100ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

 

 


இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி தொடர்புடைய விண்ணப்பதாரர்களின் பதிவு செய்த மொபைலுக்கு இன்று செப்டம்பர் 19 முதல்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.in என்ற இணையதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து  கொள்ளலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தங்களின் ஆதார் எண் உட்பட மற்ற தகவல்களுடன்  1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!