undefined

அட... அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை... பயணிகள் வரவேற்பு!   

 


தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் பாட்டில்கள்  விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.  தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் 2060 சாதாரண மற்றும் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்கும் போது, தங்களுக்கு தேவையான குடிநீா் புட்டிகளை பேருந்து நிறுத்தும் இடங்களில் மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும்.
தொலை தூர பயணத்தின்போது குடிநீா் தேவைப்பட்டால், பேருந்திலேயே குடிநீா் பாட்டில்கள்  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையேற்று அரசுப் பேருந்துகளில் ஒரு லிட்டா் குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.


இது குறித்த ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட பிறகு, இத்திட்டம் தொடா்பான விரிவான அறிவிப்புகள் வெளியிடப்படும். ஒப்பந்தப்புள்ளி தொடா்பான விவரங்களை  அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் .

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?