நீங்க ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது? கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு!

 

 

 

கனடா ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது? அமெரிக்காவின் 51வது மகாணமாக கனடா இணைந்தால் வான் பாதுகாப்பு திட்டம் இலவசமாகவே கிடைக்கும் என்று டிரம்ப் மீண்டும் கனடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

 

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் அமெரிக்காவுடன் இணைய கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

தொடர்ந்து அடுத்தடுத்து பேசிய டிரம்ப், அமெரிக்காவின் தயவில் தான் கனடா இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதியுதவியும், நிறைய சலுகைகளும் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது’ என்று பரபரப்பை ஏற்படுத்தினார். 

கூடவே, கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என்றெல்லாம் ஆசைகாட்டும் விதமாக ட்விட்டரிலும் பதிவிட்டார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், “நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது?” என்று கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து பேசிய டிரம்ப், "அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome எனும் வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?