undefined

 ஆடி மாசம் துவங்கிடுச்சு... ஆடி 1ம் தேதி ஏன் தேங்காய் சுட்டு கொண்டாடுகிறோம் தெரியுமா?

 
இன்று காலை முதல் ஆடி மாதம் துவங்கியிருக்கிறது. ஏன் ஆடி மாதத்தை வரவேற்க ஆடி முதல் தேதியன்று தேங்காய் சுட்டு கொண்டாடுகிறோம் தெரியுமா?

உத்திராயண புண்ணியகாலம் நிறைவடைந்து தட்சிணாயன புண்ணியகாலமான ஆடிமாதம் இன்று பிறக்கிறது. ஆடி மாதத்தின் முதல் நாளில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் சேலம் பட்டை கோயில், பால்மார்க்கெட் பகுதியில் கட்டு கட்டாக விற்பனை செய்யப்படும். அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி முதல் நாளில் தொடங்கி ஆடி18ஆம் நாளில் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான இன்றைய நாளில் மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.


இதில் நன்றாக முற்றிய தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் துளைத்து, அதிலிருக்கும் நீரை பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயின்மீது இருக்கும் நார்களை சுத்தமாக அகற்றிவிட்டு, தேங்காய் முழுவதும் மஞ்சள் பூசி அலங்காரம் செய்யப்படும். எள், பாசிப்பயறு, நாட்டுவெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை இவற்றை இடித்து அந்தக் கலவையை துளையின் வழியாக தேங்காயின் உள்ளே செலுத்த வேண்டும். முக்கால் பாகம் நிரம்பியதும் கால் பங்கு தேங்காய்த் தண்ணீரை ஊற்ற வேண்டும். தேங்காய்க்குள் இருக்கும் பொருள்களை வேக வைப்பதற்காக தேங்காய்த் தண்ணீர் சேர்க்கப்படுகிறது.
துளைக்குள் பொருந்துமாறு ஒரு நீளமான அழிஞ்சில் குச்சியின் முனையைச் சீவி, தேங்காய்க்குள் பொருத்திவிட வேண்டும். இந்த குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் உண்டு.அழிஞ்சில் அல்லது வாதநாராயணன் குச்சிகளையும் பயன்படுத்தலாம். வீட்டு வாசலில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுட வேண்டும். தேங்காய் நன்றாக வெந்த பின்னர் டப் என்று வெடிக்கும். ஓடுகளை அகற்றி விட்டு அந்த தேங்காயை சரி சமமாக இரண்டாக உடைத்து சாமிக்கு படைத்து வணங்கி பிரசாதமாக சாப்பிடுவார்கள். சுட்ட தேங்காய்க்குள் உள்ள எள்ளு, பாசிப்பயறு, நாட்டு வெல்லம், அவல், பொட்டுக்கடலையுடன் தேங்காயின் சுவையும் இணைந்து அபாரமான ருசியைத் தரும். இந்த தேங்காய் உணவு வயிற்றுப் புண்களை ஆற்றும் எனக் கூறப்படுகிறது. மேலும் புரதச்சத்துக்கள் நிறைந்த இந்த உணவு, உடலுக்கு வலிமை அளிக்கும்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!