மனைவி தொல்லை... திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை!
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ஆரோஹள்ளி அருகே அன்னதொட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேவந்த்குமார் (வயது 30) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மல்லிகா என்ற இளம்பெண்ணுடன் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை துவக்கியார். திருமணத்திற்கு பின் தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் ரேவந்த்குமார் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை எதிர்கொண்டார். நேற்று காலை, வீட்டில் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு, ரேவந்த்குமார் பிடதி ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கு, திடீரென ரெயிலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சிட்டி ரெயில்வே போலீசார் உடனடியாக வந்து ரேவந்த்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலைக்கு முன்பாக சமூக வலைதளத்தில் செல்பி வீடியோ பதிவு செய்திருந்தார். அதில் “திருமணத்திற்கு பின் மனைவி மல்லிகா கொடுத்த தொல்லையை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுக்கிறேன்” என தெரிவித்தார்.
போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுவருகின்றனர். ரேவந்த்குமாரின் மனைவி மல்லிகாவை பற்றிய விசாரணையும் நடைபெற இருக்கிறது. சம்பவம் பெங்களூரு சமூகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!