இந்தியாவின் தொடர் வெற்றிப் பயணம் தொடருமா? ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையுடன் இன்று மோதல்!

 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றில் தொடர்ந்து வெற்றியை ருசித்து வரும் இந்திய அணி, இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இலங்கையுடன் மோதுகிறது.

துபாயில் 17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் 6வது மற்றும் கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இன்றைய போட்டி சம்பிரதாய போட்டியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், வங்காளதேசத்தை 41 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்து இறுதி சுற்றை உறுதி செய்தது.

இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்திடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் வெறும் 133 ரன்களில் அடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியது பின்னடைவாகிப் போனது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஹசரங்கா, தீக்‌ஷனா கட்டுக்கோப்புடன் பந்து வீசியும் பலன் இல்லை. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் ஆக்ரோஷமாக விளையாடி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிப்பார்கள். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22-ல் இந்தியாவும், 9-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.  இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?