26 வயசு தான் ஆச்சு.. உலக அழகி போட்டியாளர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!!

 

உருகுவே நாட்டை பூர்வீகமாக கொண்டவர்  ஷெரிகா டி அர்மாஸ் . இவர் 2015ல் உலக அழகி போட்டியாளராக கலந்து கொண்டார்.    இவர் கடந்த சில மாதங்களாக  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி   சிகிச்சைகளை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

allowfullscreen

இவருக்கு வயது 26   அவருடைய மரணம் உருகுவே மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து   அவருடைய சகோதரர் மெய்க் டி அர்மாஸ்   எனது  சிறிய சகோதரியே உயரே செல்லவும். எப்போதும் என்றென்றும் என பதிவிட்டு உள்ளார்.அவருடைய மறைவுக்கு உருகுவேவின் மிஸ் யூனிவர்ஸ் அழகியான கர்லா ரொமிரோ,

என்னுடைய வாழ்வில் நான் சந்தித்தவர்களில் மிக அழகிய பெண்களில் ஒருவர் என தெரிவித்து உள்ளார்.2021ல்  மிஸ் உருகுவே அழகியான லோலா டி லாஸ் சான்டோஸ், எனக்கு அளித்த அனைத்து ஆதரவுக்காகவும், அன்பு, மகிழ்ச்சி என இன்றளவும் அவை என்னுடன் மீதமுள்ளன. அதற்காக எப்போதும் உங்களை நான் நினைவுகூர்வேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!