பெண் மருத்துவர் தற்கொலை... திருமண ஏற்பாட்டால் விபரீதம்!
திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பெண் பல் மருத்துவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகள் அமிர்த வர்ஷினி (24), பல் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு பெற்றோர் சமீபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அமிர்த வர்ஷினி தற்போது திருமணம் செய்ய விருப்பமில்லை எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும் குடும்பத்தினர் திருமணத்தை முன்னெடுத்ததால் அவர் மன உளைச்சலில் ஆழ்ந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று அமிர்த வர்ஷினி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் பெண் மருத்துவர் உயிரிழந்த இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!